Friday, July 17, 2009
ஆங்கில மோகம்
நம் மக்களும் நாடும் சென்று கொண்டிருக்கும் பாதையை பார்க்கும் பொழுது பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் திரு டாக்டர் அய்யா ராமதாஸ் போன்ற ஆட்கள் தமிழகத்துக்கு தேவை என்றே தோன்றுகிறது. அன்னர் அவர்கள் எப்பொழுதுமே தமாஷாக பேசி வந்தாலும் சமயத்தில் அவர் சொல்லும் தமிழ் பற்று உண்மையாகவே குறைந்து விட்டதோ என்று யேசிக்க தோன்றுகிறது. அதற்காக தலைவர் அவர்கள் ;-) கூறுவது போல அனைத்தையும் மாற்ற வேண்டாம் ஆனால் அடிப்படை தமிழுக்கு முக்கியத்துவம் தந்தாலே போதும் என தோன்றுகிறது.
சமீபத்தில் ஒரு சில்லறை வியாபார கடைக்கு சென்றிருந்தேன் அந்த கடைக்கு ஒரு தின கூலி வந்திருந்தார், கண்டிப்பாக அவைரை பார்த்த மாத்திரத்தில் அவர் அதிகம் படித்தவர் போலவோ அல்லது மிகுந்த அங்கில ஞயானம் கொண்டவர் போலவோ தெரியவில்லை அவர் கடைக்கு வந்து கடை காரரிடம் ஒரு 20 ரூபா தாளை கொடுத்து ஏதோ வாங்கினார் வியாபார மும்முரத்தில் கடைக்காரன் இவர் எவ்வளவு கொடுத்தார் என்பதை மறந்து "அண்ணே எவ்வளவு ரூவா கொடுத்தீங்க" என கேட்க்க சற்றும் தடுமாறாத நம்ம அண்ணன் "ட்வென்டி ருபீஸ்" தான் என பதில் அளித்தார். அந்த கடையில் இருக்கும் அனைவரும் தமிழரே மேலும் கடைக்காரர் கேட்டதும் தமிழே இப்படி இருக்கு ஏன் இந்த வெட்டி வேலை?
மற்றொரு வேலை இட்லி மாவு கடையில் இதே போல ஒரு அன்பர் Half KG கொடுங்க என்றார் அரை கிலோ எனபது என்னவென்றே தெரியாதவர் போல
கொடுமையிலும் கொடுமை என்னவென்றால் நிறைய பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அப்பா அம்மா என்ற அழைக்க சொல்ல்வது இல்லை அதற்க்கு பதி MUMMY DADDY என்று தான் அழைக்க வற்புறுத்துகிறார்கள் கேட்டால் அதற்கு பெயர் "status symbol" ஆம். பிறந்த குழந்தை முதலில் சொல்லும் வார்த்தை அம்மா. அம்மா என்ற வார்த்தை பல்வேறு மொழிகளில் ஒரு மாண்புமிகு, மதிற்பிற்குரிய, மென்மையான வார்த்தையாக பாவிக்கிறார்கள். அனால் தமிழனுக்கு என்ன ஆயிற்று என்று தெரிய வில்லை. தமிழனுக்கு வலி வந்தால், அடி பட்டாள் அம்மா என்று தன கதறுவான் யாரும் MUMMY என்று அழ மாட்டர்கள் என்பதை மக்கள் நினைவு கூற வேண்டும் .
தாய் மொழியில் தாயை அழைக்கதவணன் அழைக்க விரும்பாதவர்களை என்னென்று சொல்ல்வது????
கொடுமை சாமி கொடுமை...
பின் குறிப்பு : நான் பயங்கர தமிழ் வெறியன் அல்ல. சில இடங்களில் / நேரங்களில் ஆங்கிலம் சேர்வது தவறு இல்லை இருப்பினும் அம்மாவுக்கு மம்மி ஈடாகது என்பதே என் கூற்று. தவறு இருந்தால் திருத்தவும்...
Subscribe to:
Comments (Atom)