Wednesday, March 4, 2009
விருதுநகர் விருந்தாளி
ஒரு சனிக்கிழமை மாலை பொழுது, வெளியில் செல்லவும் மனம் இல்லாமல் வீட்டில் தூங்கவும் பிடிக்காமல் நேரத்தை விறட்டி கொண்டிருந்த நேரம் என்னுடைய கைப்பேசி என்னை பாசமாக அழைத்து.
ஹலோ!!!! சொல்லு மாப்லே.. எதிர் முனையில் என்னுடைய நண்பன் ராஜேஷ்...
ராஜேஷ்: "என்னத்த சொல்லறது... ஆமாம் எங்க டா இருக்கே நீ?"
நான்: " எத்தன தடவ சொல்லி இருக்கேன் போன்ல எங்க இருக்கேநு கேட்க கூடாது அது நாகரீகம் இல்லேன்னு? ஓகே அத விடு நான் வீட்ல தாண்டா இருக்கேன், ஒரே போர் மச்சி... எங்கயாவது வெளிய போகலாமான்னு யோசிச்சிகிட்டு இருக்கேன்"
ராஜேஷ்: "எங்கயும் போக வேண்டாம் உடனையே கிளம்பி என்னோட பாக்டரிக்கு வந்திடு ஒரு முக்கியமான விஷயம்"
நான்: "என்ன விஷயம் சொல்லுடா, நான் இங்க இருந்து கிளம்பி வருவேன் அப்புறம் எதாவது ஒரு மொக்க மேட்டர் சொல்லுவே போன்லையே சொல்லு மாப்லே "
ராஜேஷ்: "டேய் கிளம்பி வாடா கண்டிப்பா மொக்க மேட்டர் கிடையாது"
நான்: "இல்லே டா உங்கள நம்ப மாட்டேன் போன வாரம் பட்டதே போதும் சொல்லு என்ன விஷயம் "
ராஜேஷ்: "ஒன்னும் இல்லே மாப்லே உன்னோட விருதுநகர் விருந்தாளி வந்து இருக்கார் நீ வந்தின்ன நல்லா இருக்கும் அவருக்கு கொடுக்க வேண்டியத கொடுத்து அனுப்பிடலாம் அதான் கூப்டேன்"
நான்: "டேய் என்ன டா உன் நக்கலுக்கு அளவே இல்லேயா??? வேலைய பாருடா "
ராஜேஷ்: "அட உண்மைய தாண்டா சொல்றேன் நீ நான் சொன்ன பொது நம்பலே இப்போ இங்கயே வந்து இருக்கார் உடனே கிளம்பி வா.. போன்ல வேணும்னா பேசுறிய ????"
நான்: "இல்லே டா வேண்டாம் நான் ஒரு அரை மணி நேரத்துல வரேன் .. பாய் டா"
ராஜேஷ்: "ஹும்ம் ப்யீ சீக்கிரம் வந்திடு .. பாய் "
கைப்பேசியை துண்டித்த அடுத்த நொடி என் சிந்தனைகள் ஒரு எட்டு பத்து மாதங்கள் பின்னோக்கி சென்றது...
அது வடபழனி ஆற்காடு சாலையில் உள்ள ஒரு புகழ் பெற்ற வணிக வளாகம். மாலை பொழுதை நண்பர்களுடன் அங்கு கழிப்பது எங்களது வாடிக்கை. பல வருடங்களாக அங்கு சென்று வருவதால் கிட்ட தட்ட அந்த வணிக வளாகத்தில் இருக்கும் அனைவருக்கும் நாங்கள் பரிட்சியமனவர்கள். அவ்வளகத்தில் பல கடைகள் உண்டு, குறிப்பாக ஒரு உணவு விடுதியும் அதன் அருகில் இருக்கும் சேட்டா கடையும் எங்கள் தாய் வீடு போன்றது. அவ்வபோது செலவுக்கு சேட்டா விடம் காசு வாங்குவது முதல் பசித்தால் அக்கௌன்ட் சொல்லி உணவு விடுதியில் சாப்பிடுவது வரை நெருக்கம் உண்டு.
அன்றைய தினம் ஒரு 30 - 35 வயது மிக்க ஒரு வாலிபர் உணவு விடுதியில் ஏதோ பேசிக்கொண்டிருப்பதை கவனித்தோம். உணவு விடுதி பலர் வருவார் போவார் என்று எண்ணி அதை பெரிதாக எடுத்து கொள்ள வில்லை அனால் வழக்கதிருக்கு மாறாக அந்த நன்பர் நீண்ட நேரம் காசாளர் இடம் ஏதோ கேட்பதை உணர்தோம். காசாளரின் எண்ணம் அவரை விரட்டி விடுவதாக புரிந்தது இருந்தும் இதெல்லாம் சகஜம் தானே என்று என்னை எங்களது அரட்டை போய்கொண்டிடுந்தது.
சிறிது நேரம் கழித்து அந்த வாலிபர் எங்கள் முன் வந்து நின்று "அண்ணா எனக்கு நீங்க ஒரு உதவி செய்ய முடியுமா?" என்று கேட்டார் எங்கள் தரப்பில் இருந்து என்ன பண்ணனும் சொல்லுங்க, எங்களால முடிஞ்சா கண்டிப்பா பண்றோம் என்று சொன்ன அடுத்த விநாடி அவர் தனது கதையை சொல்ல ஆரம்பித்தார்.
அண்ணே என் பேரு சுரேஷ், விருது நகர்ல காய் கறி கடை வச்சி இருந்தேன். காய் கறி தொழில் தான் எங்க குடும்ப தொழில் , நான் , அப்பா , தம்பி எல்லோரும் எங்க கடைல வேல செஞ்சோம் . என்னோட நண்பன் ஒருத்தன் ரொம்ப காலமா சென்னைல இருக்கான் அவன் ஊருக்கு வந்து நீ ஏன்டா இங்க கஷ்ட படுறே என்கூட சென்னை வந்திடு அங்க நிறைய சினிமா கம்பெனி இருக்கு அதுல எதாவது வேலை வாங்கி தரேன் ஒரு நாளைக்கு 500 ரூபால இருந்து 1500 ரூபா வரைக்கும் சம்பாதிக்கலாம் கூடவே நிறைய சினிமா நடிகர் நடிகைங்கலஎல்லாம் பாக்கலாம்னு சொன்னான் . அத நம்பிட்டு வீட்ல இருந்து 5000 ரூபாய் எடுத்திட்டு அவன்கூட வந்தேன் . இங்க AVM ஸ்டுடியோ வாசல்ல என்ன ஒரு டீ கடைல ஒக்கார வச்சிட்டு இதோ வந்திடறேன் சொல்லிட்டு போனான் என்னோடே பையையும் தூக்கிட்டு போனான் அப்புறம் வரவே இல்லே . எனக்கு இந்த ஊர்ல யாரையும் தெரியாது அன்னிக்கு பூரா அங்கேயே ஒட்ட்கர்த்து இருந்தேன் ஆளையே காணோம் அன்னிக்கு நைட் பிளாட்பாரம் ல தான் தூங்கினேன் என்னோட நல்ல நேரம் போலீஸ் வந்து என்னோட பையிலே இருந்த 150 ரூபாவ வாங்கிட்டு போயிட்டாங்க . மூணு நாள் ஆகுது அவனையும் காணோம் சாப்பிடவும் இல்லே ரொம்ப பசிக்குது மயக்கமா வேற இருக்கு அதான் இந்த ஹோட்டல் கடைல எதாவது வேல செஞ்சா சாப்பாடு கிடைக்குமானு கேட்டேன். எனக்கு பிச்சை எடுக்க தெரியாது அண்ணே அதுவும் இல்லாம ஒரு கவுருவமான குடும்பத்துல வேற பிறந்துடேன் அதனால தான் ஒரு வேலை கேட்டேன் ஆனா அந்த முதலாளி யாராவது சிபாரிசு செஞ்சா தான் வேலை தருவேன்னு சொல்லிட்டார் . நீங்க யாராவது ஒரு வார்த்தை சொன்ன வேலை கொடுப்பார் போல . கொஞ்சம் வந்து சொல்றீங்களா அண்ணே என்று சொன்னவர் சற்று தடுமாறி கீழே விழ பார்த்தார்.
அவரை விழாமல் தாங்கிய நாங்கள் என்ன சார் என்ன ஆச்சு என்று கேட்க்க , ஒன்னும் இல்லே சார் சாப்பிட்டு மூணு நாள் ஆகுது அதான் கொஞ்சம் மயக்கமா இருக்கு .. நான் பார்த்துக்குறேன் எனக்கு கொஞ்சம் வேலைக்கு மட்டும் சிபாரிசு பண்ணுங்களேன் ப்ளீஸ் என்றார் ... இதை கேட்டு அதிர்ந்த நாங்கள் . அதெல்லாம் இருக்கட்டும் மொதல்ல எதாவது சாப்பிடுங்க என்று சொல்லி ஒரு பரோட்டா வாங்கி அவரிடம் கொடுத்தோம் . அதை உண்ட மறு நொடி வாந்தி எடுத்தார் அந்த அன்பர் . சட்டென்று எங்கேயோ எப்பொழுதோ கேட்ட நினைவு . வெறும் வயிற்றில் எதாவது திட ஆகாரம் சாப்பிட்டால் அது குமட்டி விடும் என்று . உடனேயே பரோட்டாவை அவரிடம் இருந்து வாங்கி விட்டு ஒரு சாத்துக்கொடி ஜூஸ் வரவைத்து கொடுத்தோம் . அதை பருகியவர் சற்று சுதாரித்தார் ... இதனை கண்ட எங்களுக்கு அவருக்கு எப்படியாவது உதவ வேண்டும் என்ற எண்ணம் வந்ததது .
அண்ணே எந்த ஊரு சொனீங்க? விருதுநகர் தானே ? இங்க இருந்து விருதுநகர் போக எவ்ளோ செலவு ஆகும் என்று கேட்க . "அதெல்லாம் வேண்டாம் சார் வேலைக்கு மட்டும் சொல்லுங்க உங்களுக்கு புண்ணியமா போகும் என்றார் " இருப்பினும் விடா பிடியாக அவரிடம் கேட்டதில் பஸ் டிக்கெட் மட்டும் 160 ருபாய் என்று தெரிந்தது . அந்த நேரம் பார்த்து யாரிடமும் பணம் இல்லை . உடனடியாக சேட்டா விடம் 200 ருபாய் கடன் வாங்கி அதில் ஒரு 15 ரூபாய்க்கு இட்லி வாங்கி அவரிடம் தந்தோம் . மீதம் இருந்த ௧௮௫ ரூபாயை அவரிடம் தந்து 160 ரூபா டிக்கெட் இக்கு வச்சிகோங்க 10 ரூபா இங்க இருந்து கோயம்பேடு போக வச்சிகோங்க மீதம் இருக்கிற பைசாவை வழி செலவுக்கு வச்சிகோங்க என்று சொல்லி அவரிடம் தந்தோம் . இதனை பெற்று கொண்ட அவர் உங்கள என்னோட வாழ்நாள்ல மறக்க மாட்டேன் . ஊருக்கு போனதும் இந்த பைசாவை முதல் காரியமா மணி ஆர்டர் பண்ணிடுறேன் என்றார் . மணி ஆர்டர் எல்லாம் வேண்டாம் சார் , நீங்க இறங்கினதும் மிச்சம் உள்ள பைசா லிருந்து ஒரே ஒரு போன் கால் மட்டும் பண்ணி நீங்க போய் செந்துடீங்கன்னு சொல்ல்லுங்க அதுவே எங்களுக்கு போதும் என்று சொல்லி ஒரு துண்டு காகிதத்தில் என்னுடைய கைப்பேசி என்னை குறித்து கொடுத்து அவரை பத்திரமாக கோயம்பேடு செல்லும் பேருந்தில் ஏற்றி விட்டோம் . அந்த நாள் எங்களுக்குள் பரம சந்தோசம் ஒரு நல்ல மனிதருக்கு உதவ முடிந்ததே என்று .
மக்களிடம் விசாரித்ததில் விருதுநகர் போய் சேர மறு நாள் காலை ஆகிவிடும் என்று கூறினர். அதனால் மறு நாள் அவருடைய அழைப்பை எதிர்பார்த்து காத்திருந்த எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது . நாட்கள் ஓடின ஆனால் அவரிடம் இருந்து அழைப்பு மட்டும் வர வில்லை . இதனால் எனது நண்பர்கள் என்னை அடிக்கடி கிண்டல் அடிப்பது உண்டு . சமீப நாட்களாக வேறொரு நன்பர் மூலம் நாங்க வழி அனுப்பிய விருதுநகர் சுரேஷ் அக்கம் பக்கத்தில் தென் படுவதாக ஒரு கேள்வி ... இதை நினைத்து பல முறை வருந்தியது உண்டு ... இன்று இப்படி ஒரு போன் கால் ...
இந்த பின்னோட்டங்கலக்கு பின் மறுபடி கைப்பேசியை எடுத்து ராஜேஷ் இக்கு போன் செய்தேன் ...
ராஜேஷ் : "எங்க டா இருக்கே?"
நான் : "வீட்ல தாண்ட இருக்கேன் "
ராஜேஷ் : "உன்ன சீக்கிரம் வர சொன்னேன் இல்லே , அவன் அதே கதைய சொல்லிட்டு இங்க வந்து நம்ம கிட்டயே மாடிகிட்டன் மாப்லே , கட்டி போட்டு இருக்கேன் சீக்கிரமா வா "
நான் : "இல்லே டா நான் வரலே . எதுக்கு டா அவன கட்டி எல்லாம் போட்டு வச்சி இருக்கீங்க ? அதெல்லாம் வேண்டாம் விட்டு விடு ... நமக்கு ஏன் பாவம். அவனா திருந்திடுவான் "
ராஜேஷ் : "அவன் திருந்துறானோ இல்லேயோ கண்டிப்பா நீ திருந்த மாட்டே , ஒகே நான் பாத்துக்குறேன் முடிஞ்ச வா இல்லென அப்புறமா கால் பண்ணு பாய் டா ..."
நான் : "பாய் ..."
எனது உரையாடல் முடிந்த சற்றைக்கெல்லாம் வெளியில் இருந்து ஒரு குரல் "அம்மா சாப்பிட்டு ரெண்டு நாள் ஆகுது மா "...
Labels:
Cheating,
Courtesy,
Help,
humanity,
Short Story,
உதவி,
ஏமாளி,
பாவம்,
மனித நேயம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment